இந்த தவறுகள் தான் தலைமுடி உதிர்வுக்கு காரணமே.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
நாம் செய்யும் சில தவறாக செயல்கள் முடி உதிர்விற்கு காரணமாகிறது.
தலைமுடி உதிர்வு
தலைமுடியில் இருக்கும் அழுக்கு போக வேண்டும் என்பதற்காக அதிகளவு ஷாம்பு போடக்கூடாது. தினமும் ஷாம்பு யூஸ் செய்யக்கூடாது.
நீச்சல் குளங்களில் குளோரின் கலந்திருப்பதால், மறக்காமல் தலைக்கு ஷவர்கேப் போட்டுக் கொண்டுதான் குளிக்கவேண்டும். இறுக்கமாக பின்னல் போடக்கூடாது. தளர்வான பின்னல் அல்லது போனி டெயில் போடலாம்.
தவிர்க்கவேண்டியவை..
சூடான் தண்ணீரில் குளிப்பதை தவிர்ப்பது நன்று. மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் குளிப்பது தான் சிறந்தது. கண்டிஷனரை தலைமுடியில் நீண்ட நேரம் வைத்திருப்பது தீங்கு விளைவிக்கும். நரைமுடிகளை தேடிப்பிடித்து நீக்கக்கூடாது. அவ்வப்போது பிளவுபட்ட முடி நுனிகளை ட்ரில் செய்வது நல்லது.
ஈரத்தலையுடன் தூங்கக்கூடாது. உபயோகிக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்களை கிளீன் செய்யவேண்டும். தரமான சீப்புகளை உபயோகிக்க வேண்டும். வைட்டமின் ஏ, சி, டி, ஜிங்க், இரும்பு பயோட்டின் உணவு வகைகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே முடி ஆரோக்கியம் பெறும்.
அதேபோல், தேவையான நீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெளியில் செல்லும்போது தலையில் தொப்பி அணிந்து செல்வது முக்கியம். குறைந்த அளவு தூக்கம் தலைமுடி உதிர்வை அதிகரிக்கும்.