ஆபாச தளத்தில் வந்த ஆங்கில ஆசிரியர்.. ஷாக்கான மாணவர்கள் - என்ன நிகழ்ந்தது?

United States of America
By Vinothini Oct 07, 2023 07:28 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ஆசிரியர் ஒருவர் ஆபாச தளத்தில் வருவதை பார்த்த மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆங்கில ஆசிரியர்

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளியில் ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிபவர் பிரையன்னா கோப்பேஜ். முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியையான இவர், ஊதியமாக ரூ.35 லட்சம் வரை பெற்று வந்தார்.

missouri-teacher-found-in-adult-film

ஆனால், அவருக்கு இருந்த கல்வி கடன் மற்றும் சில பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் பணத்திற்காக தனது கணவருடன் சேர்ந்து ஆபாச படத்தில் நடித்து அவற்றை லண்டனை சேர்ந்த ஒரு பிரபல வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இதனால் இவருக்கு மாதாமாதம் சுமார் ரூ.6 லட்சம் ($8000) அதிகப்படியாக கிடைத்து வந்தது.

பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம்.. விழா நடத்தி கௌரவித்த நாடு? - ஆச்சரியம்!

பென்குயினுக்கு ராணுவ தளபதி பட்டம்.. விழா நடத்தி கௌரவித்த நாடு? - ஆச்சரியம்!

ஆசிரியர் பதில்

இந்நிலையில், ஒருவர் ஆசிரியரை ஆபாச தளத்தில் கண்டதும் பள்ளி கல்வித்துறையிடம் இது குறித்து புகாரளித்தார். இதனால் அவரை நிர்வாகம் விசாரணை செய்தது, அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் ஆலோசித்து வந்தது. ஆனால் அந்த ஆசிரியர் தனது வேலையை ராஜினாமா செய்தார்.

missouri-teacher-found-in-adult-film

அதற்கு "நான் கல்வி கற்று கொடுத்த மாணவர்கள் இச்செய்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்னால் பள்ளிக்கு கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியை பணிக்கு நான் திரும்பினால் அனைத்தும் முன்பு போல் இருக்காது என நான் அறிவேன்.

ஒரு மதிப்பு வாய்ந்த முன்னுதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நான் மாணவர்களுக்கு பாட திட்டத்தில் உள்ளதை மட்டுமே பயிற்றுவித்தேன். என்னுடைய சித்தாந்தங்கள் எதையும் அவர்களிடம் புகுத்தவில்லை. என்னை குறித்த மக்களின் எண்ணங்களை நான் கட்டுப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.