உங்க கிட்ட இந்த திறமை இருக்கா? - வேலை நிச்சயம்...!

Googling Cv for interview
By Petchi Avudaiappan Jul 26, 2021 07:19 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

 வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பித்த நபரின் பயோடேட்டாவை கண்டு அந்நிறுவனம் வியந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வேலைக்காக ஒரு நிறுவனத்தை அணுகும் போது ஒவ்வொருவரும் தங்கள் பயோடேட்டாவில் கல்வி, முன்பணி அனுபவம், திறமைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிடுவது வழக்கம். 

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதனை வீடியோ வடிவில் கூட சமர்ப்பிக்கும் வழக்கம் வந்துவிட்டது. ஒரு வேலைக்கு குவியும் பல்லாயிரக்கணக்கான பயோடேட்டாக்களில் சில நூறு பேருக்கு மட்டுமே அந்த வேலை கிடைக்கிறது. 

இதனிடையே வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வேலை ஒன்றிற்காக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் தனது பயோடேட்டாவை சமர்ப்பித்துள்ளார். அதில் தனது தனித்திறன்களில் ஒன்றாக ‘GOOGLING’ என குறிப்பிட அதனைக் கண்டு வியந்த அந்நிறுவனம் அவரை நேர்காணலுக்கு அழைத்துள்ளது. 

இதனை அந்த நிறுவனத்தை சேர்ந்த Cat McGee என்ற சாப்ட்வேர் டெவலெப்பர் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். வைரலான அந்த ட்வீட்டை இதுவரை அந்த ட்வீட் 13200 பேர் ரீட்வீட் செய்துள்ளது குறிப்பிட்டதக்கது.