ISRO: 'ககன்யான்' திட்டம் - கலனிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!

India Indian Space Research Organisation ISRO
By Jiyath Oct 24, 2023 03:38 AM GMT
Report

ககன்யான் திட்ட சோதனை கலனிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.         

ககன்யான் திட்டம்

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை இந்தியாவும் எட்ட கடந்த 2014ல் இத்திட்டத்துக்கு 'ககன்யான்' என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ISRO:

பூமியில் இருந்து 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுக்கு பிறகு பூமிக்கு திரும்ப அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

வரும் 2025ம் ஆண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்ட சோதனை நிகழ்வானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து கடந்த 22ம் தேதி காலை 10 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது.

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

நிலவில் வெடித்து சிதறப்போகும் சந்திரயான்-3 லேண்டர், ரோவர்? விஞ்ஞானிகள் பகீர் தகவல்!

வீடியோ வெளியீடு

இதில், மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும் வகையிலான மாதிரி கலனானது, TV- D1 ராக்கெட் மூலம் தரையிலிருந்து 17 கி.மீ தொலைவுவரை அனுப்பப்பட்டது. பின்னர் மாதிரி கலன் தனியாக பிரிந்து பாராசூட்டுகள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பத்திரமாக இறக்கப்பட்டது.

ISRO:

இதனையடுத்து கடலில் விழுந்த கலனை அங்கு தயார் நிலையில் இருந்த இந்திய கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இந்நிலையில் ககன்யான் சோதனை கலனிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.         

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்