அம்மா வீட்டுக்கு போன மனைவி - அனுப்பிய ஃபோட்டோவால் பதறிய கணவன்!
தனது அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடிக்கடி தகராறு
திண்டுக்கல், வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். மோளப்பாடியூரை சேர்ந்தவர் வீரழகு. இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணாம் நடைபெற்றுள்ளது.
வீரழகு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றவர் அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
மனைவி அனுப்பிய புகைப்படம்
இந்நிலையில் ஆனந்தின் செல்போனுக்கு அவரது மனைவி புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் வேறொரு ஆணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக அனுப்பியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த கணவன் பணியை முடித்து வீட்டுக்கு சென்று பார்த்ததில் மனைவியை காணவில்லை. அதைத் தொடர்ந்து தன் மனைவியை மீட்டு தரக்கோரி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அடஹ்ன் அடிப்படையில், போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள். சண்டை போட்டுகொண்டு வெளியேறிய மனைவி வேறொரு ஆணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கணவனுக்கு தகவல் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.