இரண்டாவது திருமணம் குறித்து பெற்றோருக்கு கண்டிஷன் போட்ட நாக சைதன்யா...!
இரண்டாவது திருமணம் குறித்து நடிகர் நாக சைதன்யா பெற்றோருக்கு சில கண்டிஷன் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இத்திரைப்படம் மூலம் சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கும் இடையே காதல் மலரவே இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்தனர். இதனிடையே நாக சைத்தன்யா விவாகரத்து செய்த பின்னர் தற்போது அவர் மறு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டாவது திருமணம் குறித்து நாக சைதன்யா தன் பெற்றோருக்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த நிபந்தனைகளில் தனக்கு பார்க்கப்படும் பெண் நடிகையாக இருக்க கூடாது என கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர் முழுவீச்சில் பெண் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
மறு திருமணம் குறித்து அவரது பெற்றோர் விரைவில் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.