மகளை காணவில்லை - மீரா மிதுன் தாய் பரபரப்பு புகார்!
மீரா மிதுனை காணவில்லை என அவரது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசியி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் மீரா மிதுன் விசாரணைக்கு முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை மீண்டும் அமர்வுக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், விரைவில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தாயார் புகார்
இந்நிலையில் நேற்று மாலை மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தங்களின் தொடர்பில் இல்லை.
வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொாள்ள முடியவில்லை.எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறியுள்ளார். த
ற்போது, இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைவதை அனுமதிக்க முடியாது: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil