சிதைந்த முகம், தலை.. சடலமாக கிடந்த 8-ம் வகுப்பு மாணவி - கொடூர சம்பவம்!
காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி, ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடுகளைக் காணவில்லை என்று கூறி அதைத் தேடி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். மேலும் எங்குத் தேடியும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே மகாராஜ்பூர் பகுதியை அடுத்துள்ள செங்கல் சூளையில் சிறுமியின் ஒருவர் சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.
பள்ளி மாணவி
அங்குச் சென்று பார்த்த போது காணாமல் போன 8-ம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது.இதனையடுத்து சிறுமியின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது பழிக்குப் பழி நடந்த கொலையா என காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.