அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி..துடி துடித்து உயிரிழந்த கொடூரம்- நடந்தது என்ன?
அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டதால் 6-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் -பேச்சியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மாளவிகா அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு வடித்து வந்துள்ளார். மாளவிகாவுக்கு அரிசி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி பள்ளிக்கு செல்லும்போது, அரிசியைச் சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு மதியம் அவளுக்கு திடீரென்று உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியரிடம் கூறும் போது அங்குள்ள டேபிளில் .மாளவிகாவை படுக்க வைத்தனர். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்தது ஆட்டோவில் வீட்டிற்கு வந்துள்ளார்.
6-ம் வகுப்பு மாணவி
அப்போது மாளவிகா திடீரென்று மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாளவிகா மீட்டு சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஆம்புலன்சில் அழைத்த போது தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாளவிகா ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் முடிவில் அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டது செரிமானம் ஆகாததால் மாளவிகா உயிரிழந்தது தெரியவந்தது.
இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட சாரா உள்ளிட்ட குழு! விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் துல்லிய தகவல் IBC Tamil
வெளிநாடொன்றில் துயரம் : தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 60 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பு IBC Tamil
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil