மீண்டும் இந்தியாவில்.. 27 வருடங்களுக்குப் பின் உலக அழகி போட்டி - எப்போது தெரியுமா?
27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது.
உலக அழகி போட்டி
MISS WORLD எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி கடைசியாக இந்தியாவில் 1996-ல் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது.
2023-ஆம் ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிப்போட்டி, வரும் நவம்பரில் நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி, இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில்..
ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட 6 இந்தியர்கள் இதுவரை உலக அழகி பட்டம் வென்றனர்.
இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு மானுஷி சில்லார் உலக அழகி பட்டம் வென்றார். போலந்தைச் சேர்ந்த கரோலினா தற்போது உலக அழகியாக உள்ளார்.

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
