இனி 'திருமதி உலக அழகி' - பட்டம் வென்று அசத்திய இந்தியாவின் சர்கம் கௌஷல்
2022 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி பட்டம் வென்றார் இந்தியாவின் சர்கம் கௌஷல்.
திருமதி உலக அழகி பட்டம்
திருமணம் முடிந்த பெண்களுக்காக வருடம் தோறும் திருமதி உலக அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது இந்த போட்டி.
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.
63 நாடுகளைச் சேர்ந்த இந்த போட்டியில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கர்கம் கௌஷல் திருமதி உலக அழகியாக தேர்வாகியுள்ளார்.
கடந்த ஆண்டு இந்த பட்டத்தை வென்ற ஷைலினி ஃபோர்டு, சர்கம் கௌஷலுக்கு அழகி பட்டத்துக்கான கிரீடத்தை அணிவித்தார்.
இந்தியாவிற்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியா வென்றுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் அதிதி கோவித்ரிகர் திருமதி உலக அழகி பட்டம் பெற்றிருந்தார்.