குதிரை சவாரி - 23 வயது பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் பரிதாப மரணம்!

Australia
By Sumathi May 08, 2023 05:35 AM GMT
Report

குதிரை சவாரியின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக மாடல் அழகி உயிரிழந்துள்ளார்.

குதிரை சவாரி

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் இளம் மாடல் சியன்னா வெயிர். 2022 பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, இதில் இறுதி சுற்று போட்டியாளராக முன்னேறியவர்.

குதிரை சவாரி - 23 வயது பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் பரிதாப மரணம்! | Miss Universe Finalist Sienna Weir Passed Away

இந்நிலையில், விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது குதிரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாடல் அழகி பலி

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படதாதால் சுமார் 1 மாதம் வென்டிலேட்டரில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் சிட்னி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் உளவியல் ஆகிய பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை முடித்தவர்.

குதிரை சவாரி - 23 வயது பிரபஞ்ச அழகி இறுதி போட்டியாளர் பரிதாப மரணம்! | Miss Universe Finalist Sienna Weir Passed Away

அதன்பின், பிரிட்டனுக்கு சென்று குடியேறி பேஷன் தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார். தனது 3 வயதில் இருந்தே குதிரை சவாரியில் ஈடுபடும் இவர், இது இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது என குறிப்பிட்டிருந்தார்.

இவரது மறைவுக்கு உறவினர், நண்பர்கள், சக மாடலிங் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.