காதலனை சுட்டு விட்டு நிர்வாணமாக தப்பி ஓடிய மாடல் அழகி
பிரேசிலில் மாடல் அழகி ஒருவர் போதை தலைக்கேறிய நிலையில், காதலனை சுட்டு விட்டு நிர்வாணமாக தப்பி ஓடினார்.
காதலனை சுட்ட மாடல் அழகி
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மார்செல்லா எலன் இவருக்கு வயது 31. இவர் மாடலிங் செய்து வருகிறார். இவர் தொழிலதிபரான ஜோர்டான் லோம்பார்டி 40 என்பவரை காதலித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் பிரேசிலியா நகரில் உள்ள சர்ச்சில் ஜனவரியில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்ய, பிரேசிலியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். அங்கு இருவரும் மது அருந்தி, கஞ்சா புகைத்து உச்சக்கட்ட போதைக்கு சென்றுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தின் உச்சிக்கு சென்ற மார்செல்லா துப்பாக்கியை எடுத்து லோம்பார்டியின் கழுத்தில் சுட்டார்.
நிர்வாணமாக தப்பி ஓட்டம்
பின் தான் நிர்வாணமாக இருக்கிறோம் என்பதைக் கூட அறியாமல் காரை எடுத்துக்கொண்டு ஹோட்டலின் கதவுகளை இடித்து தள்ளி விட்டு தப்பினார்.
பின்னர் கார் குறிப்பிட்ட துாரம் சென்ற நிலையில் பாதி வழியில் நின்றுள்ளது. அந்த வழியாக வந்த லாரியை வழிமறித்த மார்செல்லா லாரி டிரைவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பயணம் செய்துள்ளார்.
லாரி சிறிது துாரம் சென்ற நிலையில் லாரிக்கு பெட்ரோல் போட வேண்டும் என்று கூறி லாரியை ஓரம் கட்டியுள்ளார் டிரைவர்.
இதன் பின் மாடல் அழகி மார்செல்லா அங்கிருந்து தப்பி ஓடினார். பின்னர் அவரே போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மாடல் அழகி மார்செல்லாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.