மிஸ் சுவிட்சர்லாந்து மனைவியை துண்டு துண்டாக வெட்டி.. மிக்ஸியில் அரைத்த கொடூர கணவன்!
கணவன் தன் மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்றவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்(38). இவர் அழகி போட்டியில் பங்கேற்கும் பெண்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.
இவரது உடலின் சில பாகங்கள் பாசலுக்கு தென்மேற்கே சுமார் 3 கிமீ தொலைவில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
கணவன் பகீர் வாக்குமூலம்
அதன்பின் விசாரணையில், அவரது கணவர் தாமஸ்(41) கைது செய்யப்பட்டார். தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். லான்டரி அறைக்கு மனைவியின் உடலை இழுத்துச் சென்றுள்ளார். அங்கு ஜிக்சா, கத்தி மற்றும் தோட்டத்தில் செடிகளை கட் செய்ய உதவும் கத்திகளைப் பயன்படுத்தி உடலைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
மேலும், உடலின் சில பாகங்களை மிக்ஸியில் போட்டு அரைத்துள்ளார். மனைவி கிறிஸ்டினா தன்னை கத்தியால் குத்த வந்ததாகவும் இதன் காரணமாகவே கொலை செய்ய நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், தாமஸ் மன நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.