களத்திற்கே வராத தற்குறி.. திமுகவை பற்றி பேசுகிறார் - விஜய் பற்றி சேகர் பாபு கடும் தாக்கு!

Vijay Tamil nadu DMK Chennai P. K. Sekar Babu
By Swetha Dec 07, 2024 10:30 AM GMT
Report

களத்திற்கே வராத ஒருவர் திமுகவை பற்றி பேசுகிறார் என்று அமைச்சர் சேகர்பாபு விஜய்யை சாடியுள்ளார்.

விஜய் 

அம்பேத்கர் நினைவு நாளான இன்று (06.12.2024) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே,

களத்திற்கே வராத தற்குறி.. திமுகவை பற்றி பேசுகிறார் - விஜய் பற்றி சேகர் பாபு கடும் தாக்கு! | Minsiter Sekar Babu Slams Vijay For His Speech

முன்னாள் நீதிபதி கே.சந்துரு, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அதில் பேசி விஜய், மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத

கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026ல்,

திருமாவளவன் மனம் முழுக்க இனி நம்முடன்தான் - விஜய் பேச்சு

திருமாவளவன் மனம் முழுக்க இனி நம்முடன்தான் - விஜய் பேச்சு

சேகர் பாபு

மக்களே மைனசாக்கி விடுவார்கள் என்று தெரிவித்தார். இந்த நிலையில், 200 தொகுதிகளை அல்ல... 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்று தவெக தலைவர் விஜய்யின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.

களத்திற்கே வராத தற்குறி.. திமுகவை பற்றி பேசுகிறார் - விஜய் பற்றி சேகர் பாபு கடும் தாக்கு! | Minsiter Sekar Babu Slams Vijay For His Speech

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் திமுக குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, திமுக மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகிறதோ,

அப்போதெல்லாம் 80கிமீ வேகத்தில் பயணிக்கும் திமுக தொண்டன் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது. என்று தெரிவித்துள்ளார்.