வயநாட்டில் அடுத்த அதிர்ச்சி - அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்
வயநாட்டில் லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வயநாடு
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 400 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இன்னும் 152 பேரை காணவில்லை என மீட்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று(09.08.2024) காலை 10 மணியளவில் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட நென்மேனி, குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புகுத்திமலை, எடக்கல் குகை பகுதியில் லேசான நில அதிர்வு மற்றும் ஒலியை உணர்ந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்த குடியிருப்பு வாசிகளை வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில அவசரகால செயல்பாட்டு மைய அதிகாரிகள் ரிக்டர் அளவுகோலில் விசித்திரமான எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.