சித்தியிடம் அத்துமீறிய 16 வயது சிறுவன் - இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
16 வயது சிறுவன் சித்தியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
அத்துமீறிய சிறுவன்
கர்நாடகா, பிலியூர் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண் கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனைப் பார்த்த குடும்பத்தினர் உடனே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். விசாரணையில், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கணவருக்கு அவரது இறப்பில் சந்தேகம் வரவே, போலீஸில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதன்பின், வழக்குப்பதிவு செய்த போலீஸாருக்கு பெண்ணின் அக்காள் மகனான 16 வயது சிறுவன் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சிறுவன் 10ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
பெண் கொலை
அவனிடம் விசாரிக்கையில், பெண்ணை கொலை செய்ததை ஒப்பு கொண்டான். சித்தியும், சிறுவனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், சிறுவனுக்கு அவர் மீது மோகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது சிறுவன் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளான். ஆனால், பெண் இடம் கொடுக்கவில்லை. மேலும், இந்த சம்பவத்தை வெளியே கூறுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்த சிறுவன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.