Saturday, Jan 25, 2025

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உறவினர் போக்ஸோ சட்டத்தில் கைது

Sivakasi POSCO Crime
By mohanelango 4 years ago
Report

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் உறவு முறை கொண்ட பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்து கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவர் மனைவி ஈஸ்வரி இந்த தம்பதியினருக்கு காளீஸ்வரி வயது 14 என்ற மகள் உள்ளார்.

காளீஸ்வரி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலை ப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தாயார் ஈஸ்வரி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். பாலமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் காளீஸ்வரி தனது தாயார் ஈஸ்வரி உடன் வசித்து வருகிறார்.

கடந்த ஓராண்டுக்கும் மேல் கொரோனா காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள பட்சத்தில் காளீஸ்வரி ஆன்லைன் மூலமாக வீட்டில் தான் மட்டும் தனியாக இருந்தபடியே கல்வி பயின்று வருகிறார். அவர் தாயார் ஈஸ்வரி தீப்பெட்டி தொழிற்சாலை பணிக்குச் சென்ற போது மாணவி காளீஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்த சமயத்தை பயன்படுத்திய காளீஸ்வரி தாயார் ஈஸ்வரியின் தங்கை ஆனந்தியின் கணவர் ராமர் என்பவர் சித்தப்பா என்ற முறையில் மாணவியின் வீட்டிற்கு தினந்தோறும் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது ராமர் மாணவி காளிஸ்வரியை தனது மகள் உறவு முறை என்று கூட பாராமல் தினந்தோறும் பாலியல் தொந்தரவு செய்து வந்ததால் காளீஸ்வரி கர்ப்பமானார், கடந்த ஓராண்டாக மாணவியை அவரது சித்தப்பா பாலியல் தொந்தரவு செய்தபோது காளீஸ்வரி எதிர்ப்பு தெரிவித்தாலும் நான் உனது சித்தியுடன் வாழ மாட்டேன் உனது தாயாரை கேவலப்படுத்தி விடுவேன் என ராமர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவி கர்ப்பமான விஷயம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து மாணவியின் தாய் ஈஸ்வரி மற்றும் சித்தி ஆனந்தி கேட்டபோது தான் கர்ப்பம் ஆனதற்கு காரணம் சித்தப்பா ராமர் என்று தெரிவித்த நிலையில் கர்ப்பத்தை கலைக்க முடியாமல் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவி காளீஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த கொடூர சம்பவம் குறித்து திருத்தங்கல் அரசு மருத்துவமனை சார்பாக சிவகாசியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் அங்கு சென்ற மகளிர் போலீசார் பள்ளி மாணவி காளீஸ்வரி மற்றும் குடும்பத்தினரிடம் நடத்திய ரகசிய விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என்று தெரிய வரவே ராமரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர்.