பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி..திருமணம் செய்த குற்றவாளி - நீதிமன்றம் ஷாக் தீர்ப்பு!

Sexual harassment India Rajasthan Crime
By Swetha Aug 24, 2024 07:34 AM GMT
Report

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்ட சிறுமியை குற்றவாளியே திருமணம் செய்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

கடந்த 2019ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தை சேர்ந்த கவுஷல் ராஜ் (26) என்ற இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நீண்ட நேரம் சிறுமியை காணவில்லை என பதறிய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி..திருமணம் செய்த குற்றவாளி - நீதிமன்றம் ஷாக் தீர்ப்பு! | Minor Got Raped And Married Courts Order To Accust

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து சிறுமியை போலீசார் தேடி வந்தனர். சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் குற்றவாளியான கவுஷலை போலீசாரால் கைது செய்தனர்.

வீட்டு வேலைக்காக மட்டும் தான் - மனைவிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வீட்டு வேலைக்காக மட்டும் தான் - மனைவிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

நீதிமன்றம் தீர்ப்பு

இதன்பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவர் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு அவரையே திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி..திருமணம் செய்த குற்றவாளி - நீதிமன்றம் ஷாக் தீர்ப்பு! | Minor Got Raped And Married Courts Order To Accust

அப்போது, குற்றம் சாட்டப்பட்ட கவுஷலுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட கவுஷல் ராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.