வீட்டு வேலைக்காக மட்டும் தான் - மனைவிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
விவாகரத்து கேட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
வீட்டுவேலை
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் இவானா. இவர் 1995ல் திருமணம் செய்துள்ளார். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், 18 வயதில் ஒரு குழந்தையும், 18 வயதுக்கு மேல் ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திடீரென இவானா நீதிமன்றத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் தன் கணவன் தன்னை வீட்டுவேலைக்காக மட்டுமே வைத்துள்ளதாகவும் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது கணவர் நடத்திவந்த உடற்பயிற்சி கூடத்தையும் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
இதனை கேட்ட நீதிபதி லவுரா ருயிஸ் அலமினோஸ், அந்த பெண்ணுக்கு விவாகரத்து வழங்கியும். 25 ஆண்டுகள் வேலை பார்த்ததால் வேலை ஊதியம் 1.75 கோடி வழங்க வேண்டும் மற்றும் குழந்தைகளின் பராமரிப்புக்காகவும் பணம் வழங்க வேண்டும் என்று கணவனுக்கு உத்தரவு அளித்துள்ளார்.
தொடர்ந்து, வீட்டு வேலைகளை சமமாக பிரித்து கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் ஊதியம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த இவானா இந்த தண்டனைதான் அவருக்கு தகுதியான தீர்ப்பு என்று கூறினார்.