ஒரே அறையில் சிறுவர், சிறுமிகள்; பாலியல் அத்துமீறல் - ஓட்டல் ஓனர் உட்பட 3 பேர் கைது!

Crime Kanyakumari
By Sumathi Aug 22, 2024 07:30 AM GMT
Report

பாலியல் அத்துமீறலுக்கு உறுதுணையாக இருந்த விடுதி உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் அத்துமீறல்

கன்னியாகுமரி, தமிழகத்தின் பிரபல சுற்றுலா தளமாக அறியப்படுகிறது. இந்நிலையில், 2 ஜோடிகள் அங்கு வந்துள்ளனர். புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள

ஒரே அறையில் சிறுவர், சிறுமிகள்; பாலியல் அத்துமீறல் - ஓட்டல் ஓனர் உட்பட 3 பேர் கைது! | Minor Girls Sexual Relations In Kanyakumari

ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஒருவரது ஆதார் அட்டையை காண்பித்து ஒரு அறை எடுத்து அதில் 2 ஜோடிகளும் (4 பேர்) தங்கியுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஒரு அறையில் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் மற்றும் 17 வயதுடைய ஒரு சிறுவன் மற்றும் 22 வயதுடைய ஒரு இளைஞன் ஆகியோர் ஒன்றாக ஒரே அறையில் தங்கி இருப்பதும்,

30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள்..உண்மையை போட்டுடைத்த முன்னாள் மாணவர் :  மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது

30 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாணவிகள்..உண்மையை போட்டுடைத்த முன்னாள் மாணவர் : மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கவுன்சிலர் கைது

போக்சோவில் கைது

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 சிறுமிகள் 2 மாணவர்கள், விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோரை காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒரே அறையில் சிறுவர், சிறுமிகள்; பாலியல் அத்துமீறல் - ஓட்டல் ஓனர் உட்பட 3 பேர் கைது! | Minor Girls Sexual Relations In Kanyakumari

அதில், ஆதார் கார்டை கொடுத்து அறை எடுத்தவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் 22 வயதான சதீஷ்குமார். இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனும் என 4 பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, விடுதி உரிமையாளர் பால்ராஜ் (61), விடுதி மேலாளர் சிவன் (54), வாலிபர் குமார் (22) ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.