நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்..பின் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் செய்த நபர் - பகீர் வீடியோ!

Sexual harassment India Bengaluru Crime
By Swetha Aug 06, 2024 05:34 AM GMT
Report

நடைபயிற்சி சென்ற பெண்ணை நபர் ஒருவர் பாலியல் அத்துமீறல் ஈடுபட்ட வீடியோ பகீர் கிளப்பியுள்ளது.

பாலியல் அத்துமீறல்

பெங்களூருவில் உள்ள கோணங்குண்டே பகுதியில் கடந்த வாரம் அதிகாலை 5 மணியளவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் பெண் ஒருவர் தனியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் அப்போது திடீரென பின்பக்கத்திலிருந்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்த நபர் ஒருவர் அவரிடம் அநாகரிகமாக நடக்க முயற்சித்துள்ளார்.

நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்..பின் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் செய்த நபர் - பகீர் வீடியோ! | Man Sexually Assaulted A Women Who Went Walking

பாதிக்கப்பட்ட பெண்மணி ராஜஸ்தானை சேர்ந்தவர் என்றும், பெங்களூரில் வசித்து வரும் அவர், தன்னுடன் சேர்ந்து நடைப்பயிற்சியில் ஈடுபடும் தனது தோழிக்காக காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல் இருக்கு...? - பிரபல சீரியல் நடிகர் பகீர் தகவல் - ரசிகர்கள் ஷாக்...!

தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல் இருக்கு...? - பிரபல சீரியல் நடிகர் பகீர் தகவல் - ரசிகர்கள் ஷாக்...!

பகீர் வீடியோ

இந்த பதைபதைக்கும் சம்பவம் அப்பகுதியில் உள்ள கட்டடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமராக்களில் பதிவாகியுள்ளது. அதில், அந்த நபரிடம் இருந்து தப்பிய பெண் சாலையில் வேகமாக ஓடினார், அவரை துரத்தியப்படியே பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து கட்டியணைக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்..பின் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் செய்த நபர் - பகீர் வீடியோ! | Man Sexually Assaulted A Women Who Went Walking

இதனை தொடர்ந்து, அப்பெண் கத்தி கூச்சலிட்ட பிறகு அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அதன்படி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். காட்சிகளை ஆய்வு செய்த போலீசார்பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.