தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல் இருக்கு...? - பிரபல சீரியல் நடிகர் பகீர் தகவல் - ரசிகர்கள் ஷாக்...!
தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல் இருந்து வருகிறது என்று பிரபல சீரியல் நடிகர் கூறிய பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“மீ டூ”
கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தரானா பர்கே என்ற சமூக ஆர்வலர் “மீ டூ” என்ற சொல்லாடலை பயன்படுத்த தொடங்கினார்.
இதனையடுத்து, பிரபல அமெரிக்க நடிகையான அலைசா மிலானோ, ஹார்வே வின்ஸ்டைன் என்ற இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “மீ டூ” என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் “மீ டூ” என்ற ஹேஷ்டாக் மிகவும் பிரபலமடைந்தது.
இதனையடுத்து, இந்தியாவிலும் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகைகள் எங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.
பிரபல சீரியல் நடிகர் பகீர் தகவல்
இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனருமான ஜி.மாரிமுத்து, சினிமாத் துறையில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், “நான் உதவி இயக்குனராக பணியாற்றியபோது சினிமாவில் பாலியல் பிரச்சனைகள் இருந்தது.
1980களில் இருந்த பல சினிமா கம்பெனிகளில் இந்த பாலியல் தொல்லை வழக்கம் இருந்தது. ஒரு தயாரிப்பாளர் ஒரு பெண்ணை தனது படத்தில் அறிமுகம் செய்யார். அந்தப் படத்திலேயே அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி விடுவார்.
பெண்களும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்கு சம்மதிப்பார்கள். ஆனால் இந்த போக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சம் குறைந்து வருகிறது. இருந்தாலும், இப்போதைக்கும் சில கசடுகள் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் காலப்போக்கில் மறைந்துவிடும் என்று நம்புகிறேன் என்று பேசினார்.