சிறுமியை கடத்தி கட்டாய திருமணம்..பாலியல் வன்கொடுமை - தற்கொலை செய்த கொடூரம்
கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கட்டாய திருமணம்
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகள். இவரை அதேப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்துள்ளார். மேலும், பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், போலீஸார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், மணிகண்டனின் உறவினர் சிறுமியை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
அதனையடுத்து, இளைஞரின் தந்தை மற்றும் அவரது சித்தப்பா மகன் என இருவரையும் கைது செய்தனர். இதற்கிடையில், மன உளைச்சலில் இருந்த சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இளைஞரை போக்சோவின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர.