11 வயது சிறுமியை கடித்து குதறிய மர்ம கும்பல் - கொடூரம்!

Sexual harassment Crime Madhya Pradesh
By Vinothini Jul 29, 2023 06:12 AM GMT
Report

 மர்ம கும்பலால் தாக்கப்பட்ட சிறுமி ரத்தவெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி காணவில்லை

மத்திய பிரதேச மாநிலம், சாட்னா மாவட்டத்தில் உள்ள அர்காண்டி டவுன்ஷிப் என்ற பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென்று மாயமானார். இவரது குடும்பத்தினர், மற்றும் இவரது உறவினர்கள் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

minor-girl-raped-and-has-bite-marks-all-over-body

இதனால் காவல் நிலையத்தில் இவரது பெற்றோர் புகாரளித்தனர், தேடும் பணி தீவிரமடைந்தது. பின்னர், அவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டார். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கொடூரம்

இந்நிலையில், அந்த சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, உடல் முழுவதும் கடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அறிந்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர், அப்பொழுது இரண்டு பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் அருகில் உள்ள பிரபல கோவிலுக்கு சொந்தமான பசு காப்பகத்தில் வேலை பார்த்து வந்தவர்.

minor-girl-raped-and-has-bite-marks-all-over-body

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார், ''மைஹாரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கப் பெற்றேன். எனது இதயம் வலியால் நிறைந்துள்ளன. பெரும் மனஉளைச்சல் அடைகிறேன். போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

அந்த சிறுமிக்கு முறையாக உயர் சிகிச்சை வழங்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.