தாம்பரத்தில் பரபரப்பு : பட்டாகத்தியைகாட்டி பொதுமக்களை தாக்கிய மர்ம நபர்கள்

By Irumporai Jun 02, 2022 10:30 AM GMT
Report

தாம்பரம் அடுத்த சேலையூரில் புகைபடத்துடன் உலா வந்த மர்ம கும்பல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை பட்டாகத்தியை கண்மூடி தனமாக தாக்கியதில் ஒருவர் படுகாயம் இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25) எலக்ட்ரீசனயாக வேலைபார்த்து வருகிறார்

. நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது ஆறு இருசக்கர வாகனத்தில் கஞ்சா போதையில் வந்த 12 பேர் கொண்ட மர்ம நபர்கள் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைபடும் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர் .

இதற்கு தெரியாது என்று பதலளித்த போது தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை திருப்பி வைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர் ,இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர்.

பின்னர் இதனை தட்டி கேட்க வந்த அப்பகுதியை சேர்ந்தவர்களை கண்மூடி தனமாக தாக்கிவிட்டு சாலையில் கத்தியை வைத்து தேய்த்து கொண்டே சென்று அராஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாம்பரத்தில் பரபரப்பு : பட்டாகத்தியைகாட்டி பொதுமக்களை தாக்கிய மர்ம நபர்கள் | Tambaram Persons Attacking The Public With Swords

இதனால் பதறிய அப்பகுதிமக்கள் தங்கள் வீடுகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்,மேலும் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்க்கு போலிசார் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த மர்ம நபர்கள் யார் ,கொலை செய்வதற்காக புகைபடத்துடன் வலம் வருகிறார்காள என பல்வேறு கோணங்களில் விசாரனை செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.