பாலியல் சில்மிஷம்... கன்னத்தில் அறைந்த மாணவி - தீ வைத்து எரித்த கொடூரம்!

Sexual harassment Uttar Pradesh Child Abuse Crime
By Sumathi Sep 12, 2022 08:03 AM GMT
Report

கன்னத்தில் அறைந்த சிறுமியை, ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை 

உத்தரபிரதேசம், பிலிபிட் மாவட்டத்தில் உள்ள மதோடன்டா கிராமத்தைச் சேர்ந்தவர் 12-ம் வகுப்பு மாணவி. இவர் பள்ளிக்கு சென்று வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை கிண்டல் செய்தும், பாலியல் ரீதியாக தொல்லை தந்தும் உள்ளனர்.

பாலியல் சில்மிஷம்... கன்னத்தில் அறைந்த மாணவி - தீ வைத்து எரித்த கொடூரம்! | Minor Girl Gangraped Set On Fire By 2 Men

இதனிடையே, ஆத்திரமடைந்த சிறுமி, தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்து உள்ளார். இதையடுத்து, அவரது நண்பர்கள் அவரை பெண்ணிடம் அறை வாங்கியவன்  எனக் கூறி கேலி செய்யத் தொடங்கியுள்ளனர்.

கன்னத்தில் அறைந்த மாணவி

இதனால் அவமானமடைந்த அந்த இளைஞர், சிறுமியை பழிவாங்க முடிவு செய்து நண்பரான அமர் சிங்கிடம் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை.

பாலியல் சில்மிஷம்... கன்னத்தில் அறைந்த மாணவி - தீ வைத்து எரித்த கொடூரம்! | Minor Girl Gangraped Set On Fire By 2 Men

அவரது தாயார் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட, தந்தை வழக்கம் போல விவசாயப் பணிக்கு சென்றுள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த தினேஷும், அமர் சிங்கும் அவர் வீட்டுக்கு சென்று, வாயில் துணியை வைத்து கட்டி இருவரும் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தீ வைத்து எரிப்பு 

அதன்பின் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதனையடுத்து வீடு திரும்பிய தந்தை வந்து பார்த்த போது, மகள் தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு அவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக பிலிபிட் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் 80 சதவீதம் தீக்காயம் அடைந்த நிலையில், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், தினேஷ் யாதவையும், அமர் சிங்கையும் போலீசார் கைது செய்தனர்.