திருட்டு குற்றச்சாட்டு: சிறுவர்களை லாரியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!
பணம் திருடியதாகக் கூறி இரு சிறுவர்களை லாரியில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருட்டு பழி
மத்தியப் பிரதேசம், இந்தூரில் சோய்த்ரம் மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு வந்த காய்கறிகளை இறக்கி உள்ளனர். அப்போது இரண்டு சிறுவர்கள் லாரியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதைப் பார்த்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியுள்ளார்.

அதையடுத்து அங்குள்ள வியாபாரிகளும், லாரி ஓட்டுநர்களும் சிறுவர்களை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், லாரியின் பின்புறம் சிறுவர்களின் கால்களை கயிற்றில் கட்டி உடல்கள் சாலையில் தேயும்படி இழுத்துச் சென்றுள்ளனர்.
கொடூர செயல்
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் விரைந்து வந்து சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து சிறுவர்களை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது குறித்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், சிறுவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்டனங்கள் எழுந்து வருகிறது.