வெளிநாட்டு முதலீடு குறித்து ஆர்.என்.ரவி - கடுமையாக விமர்சித்த அமைச்சர்கள்!
சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசியதை அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆளுநர்
உதகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய கவர்னர், ”நாம் நேரில் சென்று தொழில் அதிபர்களிடம் கேட்பதாலோ முதலீடுகள் வராது.
உலகளாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்.
முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.
அமைச்சர்கள்
இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் கவர்னரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதில் அமைச்சர் பொன்முடி, "ஆளுநர் செய்தித்தாளை படிக்க வேண்டும் என்றும் அரசியல்வாதி போன்றும் எதிர்கட்சி போன்றும் பேசுவது வருந்தத்தக்கது, அவர் எதிர்கட்சி போன்று செயல்படுகிறார்.
முதல்வர் தொழிற்சாலை பெறுக வேண்டும் என்று வெளிநாடு பயணம் சென்றார். இதனை பாராட்டாமல், இதில் அரசியல் செய்வர் என்று எண்ணவில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அக்கறை இல்லை, இதன்காரணமாகவே முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்து வருகிறார்" என்று கூறினார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, "ஆளுநர் தனது சொந்த அரசியலுக்காக ஆளுநர் மாளிகையை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் தேவைப்பட்டால் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்" என்று கூறியுள்ளனர்.