'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - அதற்காக பல திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்துகிறார் - அமைச்சர் உதயநிதி!

Udhayanidhi Stalin Tamil nadu DMK
By Jiyath Feb 16, 2024 10:30 PM GMT
Report

கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "'உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிலையை நாம் எட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, அதற்குரியத் திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

இதற்காக நமது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் மூலம் ஓராண்டில் மட்டும், 1 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக்கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகளை தொடங்கினோம்.

சின்னத்தை பறிகொடுக்கும் நாதக? கர்நாடக கட்சியால் எழுந்த சிக்கல் - அடுத்த கட்ட நகர்வு என்ன?

சின்னத்தை பறிகொடுக்கும் நாதக? கர்நாடக கட்சியால் எழுந்த சிக்கல் - அடுத்த கட்ட நகர்வு என்ன?

வாழ்த்துகிறோம்  

இந்த நிலையில், நம்முடைய திராவிட மாடல் அரசின் முன்னெடுப்பில், நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்களின் மூலம், மொத்தம் 5,497 மாணவ - மாணவியர்களுக்கு ரூ.315.79 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கழக அரசின் முயற்சியால் 16,688 மாணவ-மாணவிகளுக்கு இதுவரை ரூ.1,022 கோடி அளவுக்கு கல்விக்கடன் சென்றடைந்துள்ளது. இந்தத் தொகை என்பது ஒட்டுமொத்த நாட்டின் வளமான எதிர்காலத்திற்கு - அறிவுப் புரட்சிக்கான முதலீடு என்பதில் பெருமை கொள்கிறோம். கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், படிப்பில் சாதித்து, வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.