குடியரசுத் தலைவரை கூப்பிடாம, நடிகையை கூப்பிட்டதுதான் சனாதனம் - உதயநிதி ஆவேசம்
நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை கூப்பிடாம, நடிகையை கூப்பிட்டதுதான் சனாதனமா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
மதுரையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வு ரத்துக்கான ரகசியத்தை என்னிடம் கேட்குமாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது வரும் எனும் ரகசியத்தை ஆர்.பி. உதயகுமார் கூறுவாரா?
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து பெறும் நிகழ்ச்சியை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளோம். திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் அதிமுகவோ, ஆர்.பி. உதயகுமாரோ பங்கேற்பார்களா? அதிமுக- பாஜக கட்சிகள் கூட்டணி குறித்து மாறி மாறி பேசி கொள்வது அவர்களுடைய உள்கட்சி பிரச்சனை.
சனாதனம்
சனாதனம் குறித்து நான் பேசிய அருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. சனாதனத்தை ஒழிக்கும் வரை போராட வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை கூப்பிடாமல், நடிகையை கூப்பிட்டதுதான் சனாதனம்.
சனாதன சேற்றை சந்தனம் என நினைக்கின்றனர் என்று அண்ணா பேசியதை செல்லூ ராஜூ சொல்லுவாரா? எடப்பாடி பழனிசாமி சொன்னால் கிணற்றில் குதிப்பார்களாம். அதிமுக ஏற்கனவே கிணற்றுக்குள் தான் இருக்கிறது அது புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக - பாஜக இடையே நடப்பது உட்கட்சி பூசல், காமெடி சேனல் போல பார்த்து கடந்து செல்ல வேண்டியதுதான். மகளிர் அனைவரும் முற்போக்காக சிந்திக்க வேண்டும். சுயமாக சிந்திக்க வேண்டும். அப்போதுதான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் முன்னேற்றமடையும்” எனத் தெரிவித்துள்ளார்.