சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி: உதயநிதி ஸ்டாலின் உறுதி

Udhayanidhi Stalin Tamil nadu
By Sumathi Jan 12, 2023 06:40 AM GMT
Report

 சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

உலகக்கோப்பை கபடி

சட்டப்பேரவையில் அமைச்சரான பின் முதன் முறையாக நேற்று சட்டசபையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் முதலமைச்சரின் அனுமதியுடன் சென்னையில் உலகக்கோப்பை கபடி போட்டி நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி: உதயநிதி ஸ்டாலின் உறுதி | Minister Udhayanidhi Stalin About Kabadi

மேலும் அவரிடம், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடி ரூபாய் மதிப்பில், கால்பந்து,

அமைச்சர் உறுதி

உடற்பயிற்சி கூடம், தடகள ஓடுதள பாதை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய மைதானம் அமைக்கும் பணி 60 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த மைதானத்தை தானே நேரில் வந்து திறந்து வைப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார். இதை தொடர்ந்து விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி முடித்திருப்பதாகவும்,

பாரம்பரிய விளையாட்டுகளான கபடி மற்றும் சிலம்பம் உள்ளடக்கிய போட்டிகளை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.