அதெல்லாம் ஒரு மாநாடா? அது ஒரு கேலி கூத்து - அ.தி.மு.கவை விளாசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Tamil nadu ADMK DMK Edappadi K. Palaniswami
By Vinothini Aug 27, 2023 11:39 AM GMT
Report

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அ.தி.மு.க நடத்திய மாநாடு பற்றி பேசியுள்ளார்.

திமுக இளைஞரணி கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், சுப்பிரமணியபுரம் கலைஞர் அரங்கத்தில் மாநில தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

minister-udayanidhi-spoke-about-admk

இதில் பேசிய அவர் சமீபத்தில் அதிமுக நடத்திய மாநாடு பற்றி பேசியுள்ளார். அதில் அவர், "சமீபத்தில் ஒரு மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாடு நடந்தது" என்று கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "அந்த மாநாட்டில் நடந்த கூத்தையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாநாட்டில் அரசியலோ, அவர்களின் கொள்கைகளையோ அல்லது வரலாற்றை யாராவது பேசினார்களா? காரணம் அவர்களிடம் வரலாறு கிடையாது.

minister-udayanidhi-spoke-about-admk

வரலாறு இருந்தால் தானே சொல்ல முடியும். புளி சாதம் நல்லா இருந்ததா, தக்காளி சாதம் நல்லா இருந்ததா என்பது தான் அந்த மாநாட்டை பற்றி வந்த செய்திகள். மேலும், ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி. மிமிக்ரி நிகழ்ச்சி இது தான் நடந்தது. அது ஒரு மாநாடா? அது ஒரு கேலி கூத்து" என்று கூறியுள்ளார்.