தமிழ்நாட்டிற்குள் நுழைய முயலும் விஷப் பாம்பு பாஜக'வை ஒழிக்க வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin Tamil nadu DMK BJP
By Jiyath Aug 26, 2023 03:15 PM GMT
Report

தமிழ்நாட்டிற்குள் நுழைய முயலும் விஷப் பாம்பு பாஜகவை ஒழிக்க வேண்டும் என்று குட்டிக் கதையாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இளைஞரணி செயலாளர்கள் கூட்டம்

தஞ்சை மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர்கள் கூட்டம் தஞ்சை மாவட்டம் திலகர் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைத்ச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

தமிழ்நாட்டிற்குள் நுழைய முயலும் விஷப் பாம்பு பாஜக

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் 'நான் இங்கே உங்களுக்கு ஒரு குட்டி கதை சொல்ல விரும்புகிறேன்.  நாம் வீட்டில் இருக்கிறோம். அந்த வீட்டை நாம் சுத்தமாக வைத்துள்ளோம். ஆனால், வீட்டில் அடிக்கடி விஷப் பாம்பு ஒன்று உள்ளே வருகிறது. பல முறை விரட்டி அடித்தாலும் கூட அந்த பாம்பு மீண்டும் மீண்டும் வருகிறது.

விஷப் பாம்பு

இதற்கான காரணத்தை ஆராய்ந்த போதுதான், குப்பை என்ற புதரில் ஒளிந்து கொண்ட அந்த விஷ பாம்பு நமது வீட்டிற்கு வருவது தெரிகிறது. இதனை நீங்கள் தற்போதுள்ள அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இதில் வீடு என்பது தமிழ்நாடு. இதை நாம் எப்போதும் சுத்தமாகவே வைத்துள்ளோம்.

தமிழ்நாட்டிற்குள் நுழைய முயலும் விஷப் பாம்பு பாஜக

இதில் உள்ளே வர முயலும் விஷப் பாம்பு தான் பாசிச பாஜக. அதிமுக என்ற புதரில் ஒளிந்து கொண்டு தான் அந்த விஷப் பாம்பு தமிழ்நாடு என்ற வீட்டில் நுழையப் பார்க்கிறது. அந்த விஷ பாம்பைத் தடுக்க வேண்டும் என்றால் முதலில் குப்பை புதரை நாம் சுத்தம் செய்ய வேண்டும்.

அதுபோல அதிமுக என்ற கட்சியை ஒழித்தால் தான் அத்துடன் சேர்ந்து பாஜகவை ஒழிக்க வேண்டும். கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் நாம் இங்கே இருந்த அடிமைகளைத் துரத்தி அடித்தோம்.. அதேபோல அடுத்து வரும் 2024 இல் அடிமைகளையும், அவர்களது எஜமானர்களையும் துரத்த வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டைக் காக்க முடியும்" என்று பேசியுள்ளார்.