முதலமைச்சர் மகள் திருமண நிகழ்ச்சி: பிரேக் டான்ஸ் போட்ட அமைச்சர் - வீடியோ வைரல்!

Viral Video Marriage Nagaland
By Sumathi Nov 15, 2022 05:14 AM GMT
Report

முதலமைச்சர் மகளின் திருமண நிகழ்வில், அமைச்சர் டெம் ஜெம் இம்னா நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

திருமண நிகழ்ச்சி 

நாகலாந்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருப்பவர் டெம்ஜெம் இம்னா. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இவரது ஒவ்வொரு பதிவும் இணையத்தில் ரசிக்கும் படியாக இருக்கும்.

முதலமைச்சர் மகள் திருமண நிகழ்ச்சி: பிரேக் டான்ஸ் போட்ட அமைச்சர் - வீடியோ வைரல்! | Minister Themjan Imna Along Broke Dance Nagaland

மேலும், ட்ரெண்டிங் ஆகிவிடும். இந்நிலையில், நாகலாந்து மாநில முதல்வர் நோயிபு ரியா மகளின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்ட அமைச்சர் டெம்ஜெம் இம்னா அலாங், திருமண விருந்தின் போது ஜாலியாக ஆட்டம் போட்ட காட்க்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அமைச்சர் நடனம்

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், கேப்ஷனாக, வார்த்தைகளால் முடியாததை உடல் சொல்கிறது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பலரையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

இவரது நகைச்சுவை திறனுடன் கலந்த பதிவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.