வாங்க மக்களே என்னோடு சிங்கிள் சங்கத்தில் சேருங்கள் : வைரலாகும் நாகாலந்து அமைச்சரின் கருத்து

Viral Photos
By Irumporai Jul 11, 2022 12:43 PM GMT
Report

மக்கள் தொகையினை குறைக்க  சிங்கிளாக இருங்கள் என்று நாகலாந்து அமைச்சர் கூறியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங் நிகழ்ச்சி ஒன்றில் கூறும் போது. ‘‘எங்களின் கண்கள் சிறியதாக உள்ளதால் நிகழ்ச்சியின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும் ‘’ என டெம்ஜென் இம்னா தெரிவித்திருந்து நகைச்சுவையாக இணையத்தில் வைரலானது.

வாங்க மக்களே என்னோடு சிங்கிள் சங்கத்தில் சேருங்கள் : வைரலாகும் நாகாலந்து அமைச்சரின் கருத்து | Nagaland Ministers Solution For Population Growth

இந்த நிலையில் டெம்ஜென் இம்னா தனது ட்விட்டர் பதிவில்:

சிங்கிளாக இருங்கள்

உலக மக்கள் தொகை தினத்தில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனமாக இருப்போம்.

அல்லது என்னை போல சிங்கிளாக இருங்கள். அவ்வாறு இருப்பதால் நாம் ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்கலாம், இன்றே சிங்கிள் சங்கத்தில் சேருங்கள் எனக் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாகாலந்து அமைச்சரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கலவரமான ஒற்றை தலைமை : வைரலாகும் மீம்ஸ்