தொலைச்சி கட்டிருவேன், அமைச்சரின் திடீர் ரெய்டு - மிரண்டுபோன போலீஸ்!
கன்னியாகுமரி பகுதியில் உள்ள சாவடியில் திடீரென ரெய்டு வந்த அமைச்சரால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெய்டு
தமிழகத்தில் இருந்து தினமும் இரவு நேரங்களில் ஏராளமான கனரக வாகனங்களில் கனிம வளங்களை ஏற்றி குமரி மாவட்ட சோதனை சாவடி வழியாக கடந்து செல்வதாக புகார் எழுந்து வருகிறது.
தற்போது சென்னையிலிருந்து நேற்றிரவு திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அங்கிருந்து காரில் தனது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
அப்பொழுது, அவரது காரை எதிர்த்து 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கனிமவளங்களோடு குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு செல்வதை கண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் கோபமடைந்துள்ளார்.
மிரட்டல்
இந்நிலையில், பணியில் இருந்த காவலர் மழுப்பலாக ஏதோ பதில் சொல்ல, அமைச்சருக்கு மேலும் கோபத்துடன் மிரட்டியுள்ளார்.
அவர், "எத்தனை வண்டி போகுது, இப்போதே நான் 50 வண்டிகளை பார்த்துவிட்டேன், தொலைச்சி கட்டிருவேன் தம்பி" என அங்கிருந்த காவலரிடம் தனது கோபத்தை கொட்டித் தீர்த்தார்.
மேலும், "எஸ்.பி.கிட்ட சொல்லி கனரக வாகனங்களை நிறுத்தச் சொல்லு" என அங்கிருந்த தனது உதவியாளர்களுக்கு உத்தரவு போட்டார்.
அமைச்சரின் திடீர் ரெய்டால் கனரக வாகனங்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டு, பின்னர் அதிகாலை 4 மணி முதல் கேரளவுக்கு கிளம்பியது.