ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரி வருகை - என்ன காரணம்?
ஜனாதிபதி திரவுபதி முர்மு கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார்.
திரவுபதி முர்மு
கேரளாவின் திருவனந்தபுரத்தில் தங்கி இருந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்தார். அவரை, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
அதன்பின், கன்னியாகுமரி படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் செல்கிறார். அங்கு அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்கின்றனர்.
தமிழ்நாடு வருகை
பின்னர் அவர் நினைவு மண்டபத்தை சுற்றி பார்க்கின்றனர். தொடர்ந்து அங்குள்ள தியான மண்டபத்துக்கு சென்று சிறிது நேரம் அங்கு தனியாக அமர்ந்து தியானம் செய்கிறார்.
இவரது வருகையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.