சீனாவை உலுக்கும் புதிய வைரஸ்; தமிழகத்திற்கு என்ன நிலை - அமைச்சர் தகவல்!
சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
புதிய வைரஸ்
சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக அங்கு மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிய வைரஸுக்கு ஹெச்.எம்.பி.வி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த வைரஸ், நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், இதனால் தினந்தோறும் ஏராளமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் வைரஸ் காய்ச்சலால் பீதி அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில்,
அமைச்சர் விளக்கம்
இதுபோன்ற வைரஸ்கள் பரவுவது இயல்பானது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதனைத் தொடந்து மீண்டும் ஒரு பேரிடரா? என்ற அச்சம் உலக நாடுகளுக்கிடையே எழுந்துள்ளது. அனைத்து நாடுகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த வைரஸ் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், " சீனாவில் இருந்து பரவும் வைரஸ் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹெச்.எம்.பி.வி வைரஸை அவசர நிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.