வெளிநாட்டு மாணவர்களுக்கு 2 சிறப்பு வகை விசா அறிமுகம் - வெளியான முக்கிய தகவல்!
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்
சர்வதேச அளவில் இந்தியக் கல்வி முறை வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா வெளிநாட்டு மாணவர்களிடையே உயர்கல்விக்கான பிரபலமான இடமாக உள்ளது. ஏனெனில் நாட்டில் இணையற்ற பல்வேறு கல்விப் படிப்புகள் உள்ளன.
மேலும் இந்தியாவிற்கு வந்து அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படிக்க விரும்பும் நபர்களுக்கு மாணவர் விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் யோகா, வேத கலாச்சாரம் மற்றும் இந்திய நடனம் மற்றும் இசை ஆகியவை அடங்கும்.
அந்த வகையில் இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு 2 சிறப்பு விசாக்களை அறிமுகம் செய்துள்ளது.
முக்கிய ஆவணம்
இந்தியாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், முதலில் அந்த இணையதளம் மூலமாக, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர விண்ணப்பிப்பது கட்டாய சேர விண்ணப்பிப்பது கட்டாயம் ஆகும்.
அதற்கான சேர்க்கை கடிதம் கிடைத்த பிறகு, அவர்கள் விசாவுக்கு அதற்கான இணையதளத்தில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்' விசா அளிக்கப்படும்.
அவர்களைச் சார்ந்தவர்களுக்கு 'இ-ஸ்டூடண்ட்-எக்ஸ்' விசா அளிக்கப்படும். படிப்பின் கால அளவை பொறுத்து, 5 ஆண்டுகள் வரை விசா வழங்கப்படும். அதன்பிறகு அதை நீட்டித்துக் கொள்ளலாம்