அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? - செயற்கை சுவாசம் பொருத்தம்

V. Senthil Balaji
By Thahir Jun 22, 2023 04:42 AM GMT
Report

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை 

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு? - செயற்கை சுவாசம் பொருத்தம் | Minister Senthil Balaji On Ventilator Treatment

அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் 4 இடங்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அதன்பேரில் நேற்று (ஜூன் 21) அதிகாலை தொடங்கிய அறுவை சிகிச்சை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.

வெண்டிலேட்டர் சிகிச்சை 

இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

மேலும் 24 மணி நேரத்திற்கு பிறகு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு, நீராகாரம் மூலம் உணவு வழங்கப்பட உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.