அடுத்த 3 மணி நேரத்திற்கு மயக்க நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி - அறுவை சிகிச்சை நிறைவு!

V. Senthil Balaji Tamil nadu
By Vinothini Jun 21, 2023 05:05 AM GMT
Report

 செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்தது என்று தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த வழக்கில் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை மத்திய அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

minister-senthil-balaji-heart-operation-completed

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப் பட்டது.

அதனைத்தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் அவர் காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை

இந்நிலையில், அவருக்கு மயக்க மருந்து நிபுணர்கள் உதவியுடன் இன்று காலை 7 மணிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளதாகவும், நான்கு மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

minister-senthil-balaji-heart-operation-completed

தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மயக்க நிலையில் இருப்பார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.