ஆபாச படத்தில் நடித்தேனா? உங்கள் வீட்டு பெண்களை இப்படி பேசினால் - நடிகை ரோஜா கண்ணீர்!
தன் மீதான அவதூறு கருத்து குறித்து அமைச்சர் ரோஜா கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அமைச்சர் ரோஜா
திரைப்பட நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமாக இருப்பவர் ரோஜா. அவர் மீது தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி அவதூறு பரப்பும் விதமாக பேசியுள்ளார்.
நடிகை ரோஜா ஆபாசப் படத்தில் நடித்ததாக சர்ச்சைக்குரிய வகையில் சத்திய நாராயண மூர்த்தி பேசியிருந்தார். இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கண்ணீர் மல்க பேசிய ரோஜா கூறியதாவது "நான் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி அவதூறு செய்கிறார்கள். சட்டசபையில் நான் நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி சி.டிக்களை காட்டி அவதூறு செய்தார்கள்.
பேட்டி
பெண்களை விளையாட்டு பொருட்களாக தெலுங்கு தேசம் கட்சி பார்க்கிறது. உங்கள் வீட்டுப் பெண்கள் குறித்து இப்படி தரம்தாழ்ந்து பேசினால் நீங்கள் இதை ஏற்றுக்கொள்வீர்களா என்று கூறி ரோஜா கண்ணீர் விட்டு அழுதார்.
மேலும் பேசிய ரோஜா "சந்திரபாபுநாயுடு, அவரது மகன் நர லோகேஷ் உள்ளிட்டோர் பண்டாருவை கண்டிக்காதது ஏன்?. தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய என்.டி.ராமாராவ் கூட சினிமா துறையிலிருந்து வந்தவர்தான்.
நான் நிர்வாண படத்தில் நடித்தவள் என்றால் என்னை ஏன் சந்திரபாபு நாயுடு தனது கட்சியில் சேர்த்தார். உங்கள் கட்சியில் இருந்தபோது நல்லவராக தெரிந்த நான், வேறு கட்சிக்கு சென்றுவிட்டபோது எப்படி கெட்டவராக இருக்க முடியும்? என்று ரோஜா பேசியுள்ளார்.