சந்திரபாபு நாய்டு கைது.. கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடிய அமைச்சர் ரோஜா!

Roja Andhra Pradesh
By Vinothini Sep 11, 2023 04:31 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாய்டு கைது செய்யப்பட்டதால் அமைச்சர் ரோஜா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கைது

ஆந்திராவில் கடந்த 2014 முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவியில் இருந்த காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

minister-roja-celebrates-chandrababu-naidu-arrest

இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை பல ஆண்டுகளாக விசாரணை நடித்து வந்தனர். இந்த சூழலில் நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு திடீரென கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கொண்டாடிய அமைச்சர்

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் ஜாமீன் கேட்டு சந்திரபாபு நாயுடு அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் இவர் சிறைக்கு செல்வது உறுதியானது.

minister-roja-celebrates-chandrababu-naidu-arrest

இதனால் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.