முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது; 3 மணி நேர காத்திருப்பு - பெரும் பதட்டம்!
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் வழக்கு
ஆந்திர மாநில முன்னாள் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
மாநிலத்தில் புதிய ஐ.டி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்ற தாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், அதிகாலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கைது
அப்போது தொண்டர்கள் பெருமளவில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 3 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்ய கைது வாரண்டை அவருக்கு அளித்தாலும், எஸ்.பி.ஜி அதிகாரிகள் அனுமதிக்காத நிலையில்,
தொடர்ந்து 6 மணி வரை காத்திருந்து கைது செய்திருக்கிறார்கள். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அடுத்து ஆந்திரா முழுவதும் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
திருப்பதி - திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.