இதெல்லாம் வாய் கொழுப்பு : ரோஜா மன்னிப்பு கேட்கணும் : சந்திரபாபு நாயுடு கண்டனம்
நடிகர் ரஜினிகாந்தை விமர்சனம் செய்ததற்கு ரோஜா மன்னிபு கேட்க வேண்டும் என்றும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ரோஜா விமர்சனம்
எண்டி ராமராவின் 100-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார் , அப்போது சந்திரபாபு குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறை பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோதே அந்த துறை பற்றி புரிந்து கொண்டு செயல்பட்டதால் ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்து நியூயார்க் நகரம் போல் வளர்ந்துள்ளது எனக் கூறினார்.
சந்திரபாபு நாயுடு கண்டனம்
சந்திரபாபுவை ரஜினிகாந்த் இவ்வாறு புகழ்நத்தை ரோஜா கடுமையாக விமர்சித்துள்ளார் அதில், ஆந்திர அரசியலை பற்றி தெரியாத ரஜினிகாந்த், ஐடியாவே இன்றி பேசி தற்போது ஜீரோவாகி உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு நடிகர்கள் சென்றால் அந்த மாநிலங்களை பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும். அப்படி இல்லையென்றால் அமைதியாக இருக்க வேண்டும் என கூறினார். இந்த நிலையில், ரஜினிகாந்தை விமர்சித்து பேசியதற்கு தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்திர பாபு நாயுடு கூறுகையில், ரஜினிகாந்தை ரோஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்ததற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மன்னிப்பு கோர வேண்டும்.
வாய்க்கொழுப்பு எடுத்து பேசும் தனது கட்சியினரை ஜெகன் மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத விமர்சனங்களை தெலுங்கு மக்கள் ஏற்க மாட்டார்கள்.. மன்னிக்கவும் மாட்டார்கள். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது ரஜினிகாந்த் எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என கூறினார்.