ஆட்டோ டிரைவராக களமிறங்கிய ரோஜா - இணையத்தை கலக்கும் வீடியோ!

Roja
By Sumathi Sep 30, 2023 07:56 AM GMT
Report

அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

அமைச்சர் ரோஜா 

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990 களில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு தீவிர அரசியலில் களம் இறங்கினார்.

ஆட்டோ டிரைவராக களமிறங்கிய ரோஜா - இணையத்தை கலக்கும் வீடியோ! | Minister Roja Auto Driving Video Viral

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் 2014 மற்றும் 2019 சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வைரல் வீடியோ

தற்போது ஆந்திராவின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு உதவி தொகையாக தலா பத்தாயிரம் ரூபாயை வழங்கி வருகிறது.

திருப்பதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒய் எஸ் ஆர் வாகன மித்ரா திட்டத்தில் கலந்து கொண்ட ரோஜா ஆட்டோ ஓட்டும் பெண்களுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து ஆட்டோ டிரைவர் போல் சீருடை அணிந்து ஒரு ஆட்டோவை ஓட்டி அனைவரின் கவனம் ஈர்த்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.  

இரவோடு இரவாக நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?

இரவோடு இரவாக நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி - என்ன ஆச்சு?