திமுகவை வீழ்த்திவிடலாம்.. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார் - அமைச்சர் கடும் தாக்கு!
திமுகவை வீழ்த்திவிடலாம் என்ற எடப்பாடி பகல் கனவு காண்கிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல 'வாழைப்பழ காமெடியை' போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே
சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி. திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் முதலமைச்சருமான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து,
அமைச்சர்
திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கத்தி கத்தி பேசினால் போதாது, உண்மையைப் பேசுங்கள். ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓ.பி.எஸ். வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது,
ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் 'வலிக்காமல் வலியுறுத்திவிட்டு' மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள். என்று தெரிவித்துள்ளார்.