543 தொகுதிக்கே 3 மாசம் - இவுங்க எப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தவாங்க - பிடிஆர்

DMK Palanivel Thiagarajan
By Karthick Apr 04, 2024 05:28 AM GMT
Report

கேள்வி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர் பிடிஆர் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

திமுக கூட்டணி

மாநில ஆளும் கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக என்ற வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

minister-ptr-questions-about-one-nation-election

முதல்வர் முக ஸ்டாலினில் துவங்கி அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பலரும் பிரச்சார களத்தில் தீவிரம் காட்டுகிறார்கள். தமிழ்நாடு ஐ.டி துறை அமைச்சரான பிடிஆரும் மத்திய பாஜகவை கடுமையாக சாடி தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார்.

எப்படி நடத்துவாங்க

இன்று பிரச்சரத்தில் அவர் பேசியது வருமாறு,

இந்த தேர்தலை நடத்துவதற்கு 10 நாட்களுக்கும் முன்பு ஒரு ஆணையர் ராஜினாமா செய்கிறார். அதற்கு பிறகு அவசர அவசரமாக மிகவும் ஒத்துழைப்பு வழங்குபவரை நியமிக்கிறார்கள்.

வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு - மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ள நிவாரணம்; மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு - மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

இது எப்படி நியாயமாகும். 2004-ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் வெறும் 20 நாட்களில் நடத்தப்பட்டது. அப்போதைக்கே அத்தகைய ஆற்றல் இருந்தது. ஆனால் இப்பொது 3 மாசம் ஆகுமாம். ஒரே தேர்தலில் 3 மாதங்களுக்கு நடத்துவது எப்படி நியாயமாகும். செயல் திறன் குறைந்துள்ளது அல்லது இதில் வேறு எதோ தவறான காரணம் இருக்கிறது.

minister-ptr-questions-about-one-nation-election

இப்படி ஒரே தேர்தலை 3 மாதங்கள் நடத்துபவர்கள் ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்று வினவினார். 543 சீட் தேர்தல் நடத்த 3 மாதம் ஆகும் நிலையில், பல 10 ஆயிரம் இடங்களை கொண்ட ஊராட்சி முதல் மாநில தேர்தல் என அனைத்தையும் எப்படி இவர்கள் நடத்துவார்கள்.