உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி? இன்று கூடும் அமைச்சரவையில் முக்கிய முடிவு
Udhayanidhi Stalin
M K Stalin
Government of Tamil Nadu
By Thahir
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுக்க இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை அடுத்த பரந்துாரில் அமைய உள்ள 2வது பசுமை விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மிக்கு தடை,
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உதயநிதியை அமைச்சராக்குவது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சதீவை மீட்பதற்கு தக்க தருணம் இதுவே! மோடியின் முன்பு ஸ்டாலின் பகிரங்கம்